தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆழிக்குடி கிராமத்தை
வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அக்கிராமத்தில் உள்ள சுமார் 600க்கும்
மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அனவரதநல்லூர்-ஆழிக்குடி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு வெள்ளம்
சூழ்ந்துள்ளது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால், உடனே தங்களை
காப்பாற்ற வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.