குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய வாகன போக்குவரத்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது..

மூன்றாவது மைல் மற்றும் அந்தோணியார் புரம் பகுதிகளில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் இருபுறமும் வழிந்து ஓடுகிறது..

அதேபோல திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாற்றுவடை அருகே சாலையின் இரு புறங்களிலும் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது..

அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய அந்த வாகனமானது தூத்துக்குடி கோமதிபுரம் அருகே உள்ள அந்த உப்பாற்று ஓடை மற்றும் கண்மாயினுடைய உடைப்பு காரணமாக வழிப்போக்குவரத்து அடைப்பு ஏற்பட்டுள்ளது..

அதேபோல தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லக்கூடிய எட்டையாபுரம் சாலையில் ஏபிசி கல்லூரி அருகே தண்ணீர் போக்குவரத்து அதிகமாகி வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது..

ஆகவே தூத்துக்குடிக்கு வரும் வாகனங்கள் முன்னேற்பாடாக
தயாராக வர வேண்டுகிறோம் அல்லது இந்த பயணத்தை தவிர்க்க வேண்டுகிறோம்..