தமிழ் வழியில் கல்வி பயின்றதாகப் போலியான சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த, வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, காவல்துறை டிஎஸ்பி கே.சி.சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் எம்.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ.சங்கீதா உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு!
இவர்கள் மதுரை காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வி மூலம் போலியாக பட்டம் பெற்றதும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.