
நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.
மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன்.
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.
விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது.
சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது.
சிறந்த மாநகராட்சி – கோவை
சிறந்த நகராட்சி – திருவாரூர்
சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சி 14வது மண்டலம்
சிறந்த பேரூராட்சி – சூலூர்(கோவை மாவட்டம்)
78ஆவது சுதந்திர தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.
முதல்வர் மருந்தகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பொதுப்பெயர் வகை மருந்துகள் (Generic Medicines) மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
இதைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம்.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்வு.
தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்வு –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்