வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ₹64,920 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “2023 பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை 14,159 ஆக அதிகரித்துள்ளது.

1,105 வங்கிக் கடன் மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.