மகாவிஷ்ணுவின் சக்தியான இவ்வம்மை அம்பிகையின் கை களிலிருந்து  தோன்றியவள். இத்தேவி நாராயணி என்று போற்றப்படுகிறாள். கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பாள். நீலநிறத் தோற்ற‌த்துடன் முன்னிரு கைகள் வரதஅபய முத்திரை காட்டியும், பின்னிருகைகளில் சங்கு, சக்கரம் கொண்டும் அருள்புரிகிறாள். அழகு நிறைந்த இவ்வம்மையை வழிபட மனதில் நினைக்கும் நல்லவற்றை அருளுவாள். மேலும் அழகும் திடகாத்திரமும், செல்வ வளமும் தருவாள்.