
மக்களவை தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தம் அளித்தாலும், அதனால் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை.
இந்த தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால், களத்தை இழக்கவில்லை; களம் சாதகமாகவே இருக்கிறது.
எங்கள் இலக்கு மக்களவை தேர்தல் அல்ல; 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.
2019ஆம் ஆண்டு தேர்தலை விட, இம்முறை ஆளும் கட்சியான திமுக 7% வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறது.
ஆண்ட கட்சியான அதிமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13% குறைவாக பெற்றிருக்கிறது- பாமக தலைவர் அன்புமணி.