செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் காண்டோன் மெண்ட் பகுதியில் சென்னை விமான நிலையம் அருகே 600 கோடி அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றரை ஏக்கர் நிலம் கடந்த ஒருமாதம் முன்னர் வருவாய்துறையினரால் அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சீல்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு உத்திரவை அடுத்து அந்த இடத்தை சென்னை மெட்ரோரெயில் திட்டபணிக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த சீல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் ஒரு பொக்லைன், 4 ஜே.சி.பி இயந்திரம் உள்ளிட்ட 5 இயந்திரங்கள் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு கட்டிடங்களை இடித்து தள்ளினார்.

மேலும் இந்த இடத்தில் தற்போது மெட்ரோ ரெயில் பார்க்கிங் பணிக்காகவும், அடுத்த பல்வேறு நீட்டிப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தரப்பில் தகவல் அளித்தனர்…