தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்வது குறித்து காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக டெல்லியில் தகவல் பரவி உள்ளது

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் டெல்லியில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்ததாகவும் இதற்கு ஒரு காங்கிரஸ் எம்பி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்கவும் காங்கிரஸுக்கு 70 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.