சமூக நீதியை பற்றி பேச திமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது கலைஞர் திமுக வேறு ,மு க ஸ்டாலின் திமுக வேறு ,மு க ஸ்டாலினை இயக்குவது நான்கு அமைச்சர்கள் மட்டுமே,

விக்கிரவாண்டி தொகுதி சமூக நீதி மண், இது எங்களின் மண், வேர்வை சிந்து பாட்டாளிகள்,விவசாயிகள் அனைவருமே எங்கள் பக்கம் இருக்கின்றனர்

தேர்தல் வந்தாலே பாட்டாளி மக்களுக்கு நன்மை செய்தது போல் ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு திமுக நடத்தும் நாடகம் இது இதைப் பற்றி மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்

*சமூக நீதிக்கு போராடியவர்களுக்கு மணிவ மண்டபம் கட்டினால் மட்டும் போதாது தமிழ்நாட்டில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு தயங்குவது ஏன் பீகார் மாநிலத்தில் மட்டும் எப்படி எடுத்தார்கள்

விக்கிரவாண்டியில் பாமக மாநிலத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளருக்கு பேட்டி