
வண்டலூர் மேம்பாலம் மீது அதிக எடையுடன் வந்த லாரியில் இருந்து மரக்கட்டைகள் மேம்பாலம் சாலையில் சரிந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவை இணைக்கும் சாலை போக்குவரத்து துண்டிப்பு.
இந்த விபத்தால் வாகனங்கள் 3 கீமி தூரம் சுற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து டாரஸ் லாரியில் மரக்கட்டைகளை அதிக அளவில் ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக பன்னீர் என்பவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்துள்ளார்.
அப்பொழுது காலையில் முடிச்சூர் கடந்து வண்டலூர் உயிரியல் பூங்கா மேம்பாலம் இறங்கும் இடத்தில் திடீரென லாரியில் இருந்த மரக்கட்டைகள் முழுவதும் வலது புறமாக மேம்பாலம் சாலையில் சரிந்ததால் லாரி மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது.
மேலும் மேம்பாலம் கீழ்பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இருந்ததால் அதில் சில கட்டைகள் தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை துறையினரும் தற்போது அந்த பகுதியில் மேம்பாலில் சிக்கிய மரக்கட்டைகளையும் லாரி வாகனத்தை அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கிரேன் மூலம் அங்கு சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை விபத்தால் வண்டலூர் உயிரியல் பூங்கா செல்வதற்கு வண்டலூர் மேம்பால வழியாகச் வாகனங்கள் திருப்பி அனுப்படுகிறது.
இதனால் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல விடவில்லை என்பதால் மேம்பாலம் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.