வண்டலூர் அருகே குபேரர் கோவிலில் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா திருக்கல்யாணம், மாடு, ஆடு, குதிரை உள்ளிட்ட சீர்வரிசையுடன் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வண்டலூர் அடுத்த ரெத்த்தினமங்களத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி குபேரர் கோவில் உள்ளது,

இந்த கோவிலில் ஸ்ரீலஷ்மி முன்னிலையில் ஸ்ரீகுபேரர்-சித்திரலேகா திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது,

இதற்காக பக்தர்கள் மாடு, ஆடு, குதிரை, பழத்தட்டுகள், பட்டுப்புடைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் கோவில் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக திருக்கல்யாண ஊர்வலமாக வந்த நிலையில்

ஸ்ரீ குபேரர் சித்திரலேகா உச்சவர்களுக்கு திருமண பூஜைகளுடன் யாகம் வளர்கப்பட்டு திருமாங்கல்யம் அணிவித்து திருமணம் நடைபெற்று பக்தர்களுக்கு திருமண விருந்துடன் பச்சை குங்குமம், பச்சை கயிறுடன், பச்சை லட்டுகளை தாம்பூலம் வழங்கப்பட்டது,

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மூலவர்களுக்கும் திருக்கல்யாணம் செய்துவைத்து சிறப்பூஜைகள் செய்தனர்,

அதனை தொடர்ந்து ரூபாய் தாள்களால் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில் ஊஞ்சலில் ஸ்ரீலஷ்மி, ஸ்ரீகுபேரர்-சித்திரலேக சாமிகளை ஊஞ்சலில் தாலாட்டினார்கள்.

இந்த குபேரர் திருக்கல்யாணத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளுவர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்…

முன்னதாக திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்ட நடனமாணவர்கள் நடனமாடி ஸ்ரீ குபோரர் சித்திரலேகா சாமியை வழிப்பாடு செய்தனர்.