எள் மாங்காய் துவையல் பற்றி தெரியுங்களா. உடலுக்கு ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: எள்1/2 கப், மாங்காய்த் துண்டுகள் 1/2 கப், காய்ந்த மிளகாய் 3, பூண்டு பற்கள் 2, உப்பு – தேவைக்கு.
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய் வறுத்து பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
சுவையான எள் மாங்காய் துவையல் உளுந்தப்பருப்பு சாதத்திற்கு சிறந்த காம்பினேஷன்.