
சென்னை பெரும்பாக்கத்தில் அடுத்து அடுத்து இருவாரங்களில் இரண்டு இளைஞர்களுக்கு மாற்று கைகள் பொருத்தி கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் சாதனை.
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கை இளைஞருக்கும், மற்றொருவரின் கை ரியல் எஸ்டேட் ஆலோசகருக்கும் பொருத்தப்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக நெகிழ்ச்சி.
சென்னை பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அடுத்து அடுத்து இரண்டு நபர்களுக்கு முளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை.
இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம்.
குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை இளைஞருக்கு பொருத்திய நிலையில் நல்ல முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசகர் கார்திக், ஒராண்டுக்கு முன்னர் அவரின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது பட்டாசு வெடித்ததில் இரண்டு கைகளும் பலத்த சேதமடைந்தது.
இதனால் வழக்கமாக தன் அன்றாட வாழ்வியலில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட நிலையில் பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையை நாடினார். அங்கு மருத்துவர்கள் கொடையாளர்களிடம் இருந்து கைபெருத்தால் என கூறியதால் அதற்காக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை ஆணையத்தில் பதிவு காத்து இருந்தார்.
இந்த நிலையில் திருச்சியில் முலைச்சாவு அடைந்த நபர்களின் இரு கைகளையும் தானமாக பெற்ற நிலையில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை, எலும்பியல், மயக்கவியல், சிறுநீரகவியல் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் என அந்த அந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 18 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் 20 மணி நேரத்தில் கார்த்திக்கு இரண்டு கைகளையும் பொருத்தி சாதனை புரிந்தனர்.
அதுபோல் அடுத்த வாரமே சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் புவன்(22) வயது இளைஞருக்கு முளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் கை தானமாக கிடைக்க அதை அதே போல் 16 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் பொருத்தி சாதனை புரிந்தனர்.
அதன் பின்னர் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை மற்றும் பிசியோதரப்பி கொடுப்பதன் மூலம் படிப்படியாக இவர்கள் ஒராண்டுக்குள் இயல்பாக கைகள் செயல் படும் என்றும் இளம் வயதில் இதுபோல் பல்வேறு காரணங்களால் கைகளை இழப்பவர்களுக்கு மாற்று கைகள் பொருத்தப்படுவதன் மூலம் அவர்களின் எதிர்காலம் நம்பிக்கையுடன் வாழமுடியும் என்றும்.
இந்தியா அளவில் இதுவரை உள்உருப்புகள் அதிக அளவில் மாற்று சிகிச்சை செய்து வருகிறார்கள். அதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் குறைந்த அளவான 4 ஆயிரம் பேர்களின் உடல் உறுப்புகள் மட்டும் முளைச்சாவு அடைந்தவர்கள். கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கிறது. மேலும் விழிப்புணர்வு ஏற்பட்டு முளைச்சாவு அடைபவர்களிடம் இருந்து உறுப்புகள் மட்டும் அல்லாமல் இதுபோல் கை, கால்களையும் பொருத்தலாம் அதற்கு முளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் அப்போதுதான் மூளைச்சாவு அடைந்து இறந்தாலும் அவர்களின் உடல் உள் உறுப்புகள் மட்டம் அல்லாமல் கை, கால்களும் இவ்வூலகில் மற்றவர்களின் துயரத்தையாவது போக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதன் முதலில் முளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் இரண்டுகைகள் இளைஞருக்கு பொருத்தப்பட்டு செயல்படுவதையும் மருத்துவர்கள் காட்டினார்கள்.
இறந்த பெண் பல வண்ணங்களில் இரு கைளிலும் டேட்டூ போட்டு இருந்தது தற்போதும் அந்த இளைஞர் கைகளில் வண்ண வண்ணமாக இருந்த நிலையில் கைகளும் செயல்படுவது கைகள் மாற்று அறுவைச்சிகிச்சையில் மருத்துவர்கள் செய்யும் சாதனையை எடுத்துகாட்டும் விதமாக அமைதுள்ளது.