
மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகம் காலமானார்.
செங்கற்பட்டு மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பா.கார்மேகம் கடந்த 23.5.2024 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள அவரது மகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்லகுமார் இல்லத்தில் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் காலமானார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது அளவற்ற பற்று கொண்டு செயல்பட்டவர்.
சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், தலைவர் வாழப்பாடியார், கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிவர்.
தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு எம்.ஆர்.ராதா பகுத்தறிவு மன்றத்தை தமிழகம் முழுவதும் துவங்கு தீவிரமாக செயல்பட்டவர்.
எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்தை எந்த இடத்திலும் ஆணித்தரமாக ஓங்கி ஒலித்த இரும்பு மனிதர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவரது இல்லத்திற்கு வருகை தந்து மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், மாநில பொதுச்செயலாளர் வாழப்பாடி ராமசுகந்தன், நகர தலைவர் தீனதயாளன், முன்னாள் நகர தலைவர் குட்டி தேவராஜ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.