
குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் உள்ளது. கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது.காத் என்றால் திருமணம் அயணம் என்றால் ஆறுமாதம்.குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று முறை சென்று திருமணப்பேறு வேண்டி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். முதல் வாரம் காத்யாயனி பூஜை,இரண்டாம் வாரம் விவாஹ ரட்சாபூஜை, மூன்றாவது வாரம் ஜென்ம பத்ரிகா பூஜை என்ற படி செய்து மங்கள ரட்சை கட்டிக் கொள்ள வேண்டும். 26வயதைக்கடந்து களத்திர தோஷத்தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு சுபநாளில் காமேஸ்வரி துளசி யக்ஞம் என்ற விவாஹ வேள்வி நடத்தப்படுகிறது.ஆலயத்தில் தோரணகணபதி,மாரிசக்தி, பாலமுருகன், நாகராஜர், துர்க்கை,பத்ம விமானக்கருவறையில் கிழக்கே திருமுகம் கொண்டு ஒளிதரும் சந்திரகாந்தக் கல்லால் செதுக்கப்பட்ட வளாக அமர்ந்து அருள் தருகிறாள்.ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை 6மணிக்கு புத்ர லாபம் அருளும் பாலகாத்யாயனி யக்ஞம் செய்து இலவசமாக மூலிகை மருந்து ப்ரசாதம் வழங்கப்படுகிறது. ஓம் ரீம் கல்யாண வரம் தரும் காத்யாயனிவீ தேவியே போற்றி..!ஆலய பூஜை சேவை அறிய அலைபேசி எண்.9551184326.சழற்றுக