பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8-வயதிலிருந்து 16-வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.

இந்த சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் தொடக்கத்தில் மாணவர்கள் 8 வயதிற்கு கீழ், 10 வயதிற்கு கீழ், 12 வயதிற்கு கீழ், 16 வயதிற்கு கீழ் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தலா ஆறு சுற்றுகள் விளையாடினர்.

இந்தியாவின் 80-வது கிராண்ட் மாஸ்டர் விக்னேஷ் கலந்துக்கொண்டு முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு செஸ் கடிகாரம் பரிசாக வழங்கினார.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் திறமையாக விளையாடிய 15-நபர்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார்.

இதில் என்.ஆர். மவுண்ட் செஸ் அகாடமியின் நிறுவனர் ரவிச்சந்திரன் மற்றும் காசாகிராண்டு இண்டர்நேஷனல் பள்ளியின் தலைமைச் செயல் அலுவலர் துவாரகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.