
முன்னதாக, வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால் குழுவுக்கு ஒரு பெயர் என கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதன்பின்னரே குழு உருவாகும்.
ஆனால், வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அப்டேட் செய்துள்ளதன்படி குழுவை உருவாக்கும்போது அதற்கு பெயர் குறிப்பிடத் தேவையில்லை.
இதன்படி நீங்கள் யாரையெல்லாம் குழுவில் சேர்க்கிறீர்களோ அவர்களது எண்கள் உங்கள் போனில் என்ன பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர்கள் தோன்றும்.
உதாரணமாக ஏ, பி & சி என்று இருக்கும். குழுவில் உள்ளவர்களுக்கு அவர்களின் போனில் உங்கள் பெயர் என்னவோ அந்த பெயர் தெரியும்.
பெயர் இல்லாத இதுபோன்ற குழுவில் 6 பேரை மட்டுமே இணைக்க முடியும்.
அவசரமாக ஒரு குழுவை உருவாக்கும்போது பயனர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் பல நாடுகளில் அப்டேட் ஆகியுள்ள இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்று மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.