
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், அஷ்டலஷ்மிநகர், மகாலஷ்மிநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் புயல் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் அரசி, மளிகை தொகுப்புகள், போர்வை என நிவரணபொருட்களை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், சரஸ்வதி மனோகரன், வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் நிரவாரணங்களை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- ஆண்டுதோரும் வெள்ளதால் பாதிக்கும் வரத்தராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதிகளில் 100 கோடிக்கு தமிழக முதலமைச்சர் உத்திரவின் பேரில் நடைபெற்ற பணிகளால் தற்போது பெய்த வரலாறு கானதா மழையிலும் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது என்றார்.
புயல் வெள்ள நிவாரண பணிக்கு தமிழக முதலமைச்சர் கேட்டுள்ள தொகையில் சிறு தொகை கொடுத்துள்ளனர் என்றார்.