பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் பணிகளுக்கு ஆங்ஆங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர முடவில்லை. இதனால் இன்று காலை பல்லாவரத்தை நோக்கி எரிவாயு ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் சிக்கி இடது புறமாக சரிந்தது. தகவல் அறிந்த மாநகராட்சியினர் லாரியில் மற்றொரு பக்கத்தில் கம்புகளால் முட்டு கொடுத்த நிலையில் நெடுஞ்சாலை, காவல் துறையினருடன் இனைந்து இரண்டு கிரேன்கல், ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவ்வயில் காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்….