
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது. தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள சத்துகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம். முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனை தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது இதன் நன்மை இன்னும் கூடுகிறது.