
சென்னை பள்ளிக்கரணையில் நள்ளிரவில் மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் சிறுநீர் கழிக்க சென்று காலால் மிதித்ததில் ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு,
சென்னை பள்ளிகரணை, பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (46) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இருவருக்கு திருமணமாகி காமட்சி என்ற மனைவியும் கார்த்திக் மற்றும் விஜயக்குமார் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார். அப்பொழுது உயர் மின் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது தெறியாமல் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் அங்குள்ள வீட்டில் பதிவாகியிருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று ரகு உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் வாரத்தில் இரு முறை இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் அறுந்து விழுவதாகவும் இது குறித்து புகாரளித்தாலும் மின்சார ஊழியர்கள் புதிதாக மாற்றாமல் பழுது பார்த்து செல்வதால் இச்சம்பவம் நிகழ்துள்ளதாகவும் தெறிவித்தனர்.