பல்லாவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நீண்ட பாலம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்ட பிறகு சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன. ஆனால் தற்போது சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக வெளியூர் செல்லும் வாகனங்களும் ஒரு பக்கத்தில் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இதன் பின் மீண்டும் பல்லாவரம் பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலத்தின் இறுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் கேட்கப்பட்டு அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது இப்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.