
பல்லாவரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது ஐ.டி ஊழியர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (62) துறைப்பாக்கதில் உள்ள தனியார் கட்டிட நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு உணவு அருந்துவதற்காக சாலையை கடக்க நின்ற போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரனையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சஞ்சய் (22) என்பதும் ஐ.டி நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.