சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கண்கவர் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது, உயர் ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினர் கண்டுகளித்தனர்.

பரங்கிமலையில் உள்ள சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்றுவரும் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெறவுள்ளது.

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தின தலைமை கமெண்டர் லெப்டினன்ட் ஜென்ரல் சஞ்ஜீவ் செளகான் உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்றுவருவோர்களின் உறவினர்கள் கண்டுகளிக்கும் விதமாக கண்கவர் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ராணுவ பல்வேறு குழுக்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்தனர்.

ஜிம்னாஸ்டிக் வீரர்களில் நடனத்துடன் நெருப்பு வளையாத்தில் தாவி வெளியேறுதல்,

ராணுவகுழுவினரின் தாக்குதல், தடுப்பு முறை விளக்கம்,

ராணுவ பைப்பிங்க், டிரம்ஸ் குழுவினரின் ஒய்யார நடனத்துடன் இசை முழக்கம்,

இரு எதிர் எதிர் திசைகள், நான்கு எதிர் எதிர் தசைளில் மோட்டார்சைக்கிள்களை இயக்குவது, வீலிங், 10பேர் தாண்டுதல், மோட்டார் சைக்கிள் மீது ஏணியில் சென்றவாறு ஓட்டி செல்லுதல் உள்ளிட்ட திகில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள்,

களரிபயட்டு எனும் கத்தி, வேல், சிலம்பம், வீச்சரிவாள், சுருள் என சுழற்றுவது சண்டையிடுவது

சிறு விமானம், குவாட் காப்டர் இயக்குவது,

குதிரையேற்றம் சாகசங்கள் என காண்போரை மெய் சிலிர்க்கும் விதமாக ராணுவ குழுவினரின் சாகசங்களை நிகழ்ச்சி பாராட்டை பெற்றனர்.

அதனையடுத்து சிறப்பாக வீர தீர சாகசங்கக் நிகழ்த்திய குழுவினருக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தின தலைமை கமெண்டர் சஞ்ஜீவ் செளகான் பரிசுகளை வழங்கினார்.

நாளை காலை நடைபெறும் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியை இந்திய விமானப்படை தலைவர் வி.ஆர்.செளதிரி பார்வையிட்டு அணிவகுப்பு மறியாதையை ஏற்றுகொள்கிறார்.