
தேவையான பொருட்கள்: பன்னீர் 200கிராம், எண்ணெய் -4ஸ்பூன், பட்டர் 50கிராம், பட்டை 2, லவங்கம் – 1, சீரகம் -1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், வெங்காயம் -3, தக்காளி – 2, கருவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய்2, இஞ்சி பூண்டு2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், தனியா தூள் -1 ஸ்பூன், மிளகாய் தூள் -1.1/2ஸ்பூன், காரமசாலா தூள் -1 ஸ்பூன், தயிர் -4டீஸ்பன் செய்முறை: தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பன்னீர் நன்கு பொன்னிறமாக வதக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், பட்டர், விட்டு பட்டை, லவங்கம், சீரகம், சோம்பு சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். கொத்தமல்லியைத்தூவி, பிறகு தக்காளி போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், காரமசாலா தூள் போட்டு வதக்கவும். தயிர் சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பும் சேர்க்கவும். பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும். நன்கு கிரேவி வந்த பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் கிரேவி ரெடி.