நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.

இதையடுத்து நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைந்தனர். ஆனால், வீடு செல்வதாக அவர் தெரிவித்தார்.

“மம்தா தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனவும், மருத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனையின்படி அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும்” என எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குநர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

முன்னதாக மம்தா கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்ட நிலையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால் உண்மையில் மம்தாவை யாரும் தள்ளவில்லை எனவும், அவருக்கு ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும் திரிணாமூல் கட்சி சார்பில் தெளிவுடுத்தப்பட்டுள்ளது.

“உண்மையில் மம்தாவை யாரும் பின்னால் இருந்து தள்ளவில்லை. மாறாக, அந்த நேரத்தில் ஏதோ ஒரு சக்தி தன்னை பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக உணர்ந்த நிலையில், அவர் கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.