அறுவடை செய்யப்பட்ட கேரட்களை மூட்டைகளாக கட்டி, கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களில் முழுமையாக கழுவிய பின், சுத்தம் செய்யப்பட்ட கேரட் மூட்டைகளாக கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தம்பா (வயது 35) பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் தம்பாவின் தலை மற்றும் கை சிக்கியது. உடனே அங்கிருந்து தொழிலாளிகள் இயந்திரத்தை நிறுத்தி தம்பாவை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.