ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை.

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும்.

விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது.

சிறிய நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை.

இந்த முறை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தேசத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்.

தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

உலக பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு 15% உள்ளது.

பல புதிய சீர்திருத்தங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்படும்- நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை.

அடுத்து வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்திய திட்டங்கள் இருக்கும்.

கூட்டாச்சி தத்துவம் மற்றும் பரிபூரண ஒத்துழைப்பை நோக்கி இந்திய அரசு செயல்படும்.

இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்.

மேலும் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்கள் வகுக்குப்படும்.

உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.