தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி காற்று சுழற்சி நகர்வதால் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களை பொறுத்தவரை நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகலாம். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யும். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.