தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருதவேல் என்ற விசாரணை கைதி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, கொலை மிரட்டல், பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புகாரில் இவருடன் கைதான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும் சிறையில் உள்ளனர்.
பிரபல ரவுடி ஒருவரின் வீட்டில் மான் கொம்பு, துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பப்பற்றப்பட்டது, நெல்லை ரவுடி ஒருவரின் காதலி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக ஒரே குழுவைச் சேர்ந்த கைதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்த நிலையில் கைதி மருதவேல் மீது கும்பலாக தாக்குதல் நடத்தி கட்டை, கம்பியால் குத்தியதால் அவர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரூரணி மருதவேல் தாக்கப்பட்டது தொடர்பாக, முள்ளக்காடு, கோரம்பள்ளம், குலையன்கரிசல், தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிகளைச் சேர்ந்த கைதிகளிடம் பெருமாள்புரம் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
கடந்த 2021 ஏப்ரல் மாதம் பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் முத்துமனோ என்ற கைதி அடித்தே கொல்லப்பட்டார்.
அதற்கு பெரிய அளவில் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் மீண்டும் ஒரு கொலை முயற்சி நடந்துள்ளது.