நெதர்லாந்தின் சர்வதேச செஸ் தொடர் நடந்தது.
இந்தியா சார்பில் களமிறங்கிய திவ்யா தேஷ்முக் (நாக்பூர்) பங்கேற்றார்.

கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற இவர், இம்முறை சாலஞ்சர் பிரிவில் 12வது இடம் பிடித்தார்.

இத்தொடரின் போது பாலியல் ரீதியாக தொல்லைக்கு ஆளானதாக திவ்யா தெரிவித்துள்ளார்.

இது்குறித்து திவ்யா 18, வெளியிட்ட செய்தி, பொதுவாக செஸ் விளையாட்டில் வீரர்கள் செயல்பாடு, அவர்களது திறமை குறித்து மட்டும் தான் விவாதிப்பர். ஆனால் வீராங்கனைகள் தங்களது திறமைக்கு சற்றும் தொடர்பில்லாத விஷயங்களுக்காகத் தான் பேசப்படுகின்றனர்.நெதர்லாந்து தொடர் முடிந்த பின் இதுகுறித்து பேச விரும்பினேன்.

இத்தொடரில் பல சுற்றுக்களில் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால், இங்கு யாரும் எனது திறமை குறித்து பேசவில்லை. நான் என்ன ஆடை அணிந்துள்ளேன், எனது முடி எப்படி உள்ளது என, தேவையற்ற அனைத்து விஷயங்கள் மீது தான் கவனம் செலுத்தினர்.

இது நியாயமற்றது. மிக வருத்தமாக இருந்தாலும், இது தான் உண்மை.

எனது பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஒரு சிலர் தவிர, மற்றவர்கள் தேவையற்றவை குறித்து தான் பேசினர்.

சம்பள விகிதத்தில் சமமாக நடத்தப்பட்டாலும், வீராங்கனைகள் இன்னும் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவிக்கின்றனர். அடிக்கடி ஆடை குறித்து தான் கேட்கின்றனர். பெண்களுக்கு சம மரியாதை கிடைக்க வேண்டும்.