
திருவொற்றியூர். நவ. 30 திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின், மூலவர் ஆதிபுரீஸ்வரர்.
இவர் ஆண்டு முழுவதும், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கவசம் அணிவித்தபடி காட்சியளிப்பார்.
ஆண்டுக்கொரு முறை கார்த்திகை தீபத்தை யொட்டிய மூன்று நாட்கள் மட்டும், கவசம் திறக்கப்பட்டு, ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பி ராணி தைலாபிஷேகம் நடக்கும்.
அதன்படி, இவ்வாண்டு விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின், கவசம் திறக்கப்பட்டு, மூலவர் ஆதிபுரீஸ் வரருக்கு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கடும் மழையையும் பொருட் படுத்தாமல், ஆயிரக் கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி மழையில் நனைந்தபடி ஆதிபுரீஸ்வரை தரிசனம் செய்தனர்.
இரவு நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் , தெலுங்கானா கவர்னர் தமிழிசை
தனது கணவர் சவுந்தரராஜனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், மூன்றாம் நாளில் அமைச்சர்
பி. கே.சேகர்பாபு நடிகர் ராகவா லாரன்ஸ்
கே. பி,சங்கர் எம்எல்ஏ. மண்டலகுழுத் தலைவர் தி. மு. தனியரசு பாஜக ஜெய்கணேஷ் மற்றும் அரசியல் கட்சியினர் காவல்துறை மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் உட்பட பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஆதிபுரீஸ்வரரை வணங்கி சென்றார்.
மூன்று நாள் முழுவதும் தேரடி சன்னதி தெருவில் குழுமிய பக்தர்களால், அப்பகுதியே விழா கோலம் பூண்டது. பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் காதர்மீரா இப்ராஹிம் தலைமையில் பலப்படுத்தப்பட்டது.
கவச திறப்பு விழா ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தார்.
கிமவா…நிருபர்