சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெறுகிறது.

இன்று திருத்தேர் அளங்காரம் செய்யப்பட்ட நிலையில் ரெங்கநாதபெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருத்தேரில் வலம் வந்தார்.

காலை புறப்பட்ட தேர் திருநீர்மலையை சுற்றி வலம் வர கோவிந்த கோவிந்த கோஷங்களுடம் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துசென்றனர்,

வழி நெடுகிலும் வெயில் தாக்கத்தை போக்க தண்ணீரை சாலையில் உற்றி குளிர்வித்தும், பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானம், உணவுகள் ஆங் ஆங்கே உபயதாரர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு

20ஆம் ஆண்டக காலை, மதியம், மாலை மூன்று வேளையும்

8000 பேருக்கு பம்மலை சேர்ந்த நரேஷ் ஏஜென்சி ஆர்.புருஷோதமன்,

கணேஷ் கண்டஸ்ரஷன் ஆர்.சொக்கலிங்கம்

அகியோர் கூட்டாக அன்னதான வழங்கினார்கள்.