திண்டுக்கல்லில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழைப் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல்லில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் மழைநீர் ஆற்றுவெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்ட நிர்வாகம், பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு குறித்து வெளியிட்ட தகவலில், இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை திண்டுக்கல்லில் 39 செ.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.