இதைப் பார்த்த 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் எந்த குடியிருப்பில் இருந்து குப்பை வெளியேற்றப்படுகின்றது என்பதை கண்டறிந்தார். சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக சென்று குப்பைகளை திறந்தவெளியில் தூக்கி எறிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார். அவருடன் துப்புரவு மேற்பார்வையாளர் கார்மேகம் உடன் சென்றார்.