தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தில் முழுவதும் மழைநீர் சூழ்துள்ளதால் வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனை சென்று வரமுடியாமல் மழைநீரில் நடந்துசென்றனர்.

மேலும் அங்கு பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆகாயதாமரை செடிகள் சூழ்ந்த நிலையில் உள்ளதால் நாள் பார்பதற்கு குளம்போல் காட்சியளிக்கிறது.

ஏற்கனவே தாழ்வான பகுதியான இந்த மருத்துவமனையில் அருகாமையில் உள்ள பச்சமலை நீர் இப்பகுதியில் தேங்கி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிறிய மழைநீர் கல்வெட்டு மூலம் கடந்து சிட்லபாக்கம் ஏரிக்கு சென்றடைய வேண்டும் ஆனால் போதிய அளவு கல்வெட்டு அகலப்படுத்தாமல் உள்ளதால் மழைநீர் தேக்கமடைந்து ஒருரிரு நாட்கள் பின்னர் வடிகிறது….