
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள்பயன்பாடு அதிகரித்துள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.