தபால் அதிகாரி மற்றும் உதவி தபால் அதிகாரியாக பணியாற்ற, பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு;

நாடு முழுவதும் 44,228 காலியிடங்கள் உள்ளன; தமிழகத்தில் மட்டும் 3,789 காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,5ம் தேதி.

தபால் துறையில் 44,228 பேருக்கு தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), உதவி தபால் அதிகாரி பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே.
விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் கையாளும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் காலி பணியிடங்கள் உள்ளன.

மண்டலம் வாரியாக தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

மாநிலங்கள்- காலி பணியிடங்கள்.

ஆந்திரா- 1355
கேரளா- 2,433
கர்நாடகா- 1940

வயது.

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது.

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அப்ளே செய்ய கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்க கட்டணம்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை ஆப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

| ரயில்வேயில் 7,950+ இடங்கள்… விண்ணப்பிக்கலாம்: https://youtu.be/4m9rJGtJRuk |