
சென்னை அடுத்த பல்லாவரத்தில் சர்வதேச பாதுகாவலர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழக டி.ஜி.பி கலந்துக்கொண்டு பாதுகாவலர்கள், பாதுகாவர் நிறுவன உரிமையாளர்களிடம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
தமிழ்நாட்டில் 2 லட்சம் தனியார் பாதுகாவலர்கள், இந்திய அளவில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் காவல் துறையினருக்கு ஈடாக பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
10 ஆண்டுகளில் 30 முதல் 40 சதவீகிதம் பாதுகாலர்கள் பணி அதிகரித்துள்ளது. மேலும் அவர்களுக்கு செல்போன், கணிணி, சிசிடிவி காட்சி கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களின் பணித்திறன் மேம்படும் அதனால் குற்றம் குறையும் அவர்கள் பணிபுரியும் இடம் பாதுகாக்கப்பான சூழல் ஏற்படும்.
பாதுகாவலர்களும் தங்களுக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்தி அவர்கள் பணிபுறியும் இடத்திலேயே உடற்பயிற்சி அளித்தல், லிப்ட் இயக்கம், பல் பிரச்சனை சமாளித்தல் உள்ளிட்ட திறனை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு மதிப்பு கூடும் நல்ல வருமானமும் கிடைக்கும் என்றார்.
விமான நிலையம், முக்கிய பிரமுகர்கள், என பல்வேறு இடங்களில் மகளிர் பாதுகாவலர்கள் தேவை உள்ளது அதனால் காவல் துறையில் பணி சேரமுடியாதவர்கள், வயது வரம்பு தாண்டிய மகளிர்கள் பயன்படுத்தி வருமானம் ஈட்டவேண்டும் என்றார்.
அரசும் காவல் துறையும் போதை பொருள் நடமாட்டத்தை கட்டு படுத்த முடியும் இளைஞர்கள் தான் விளையாட்டில் கவனம் செலுத்தி ஒழுக்கத்தை காத்திட வேண்டும் என்றார்.
காவல் துறையில், குற்றவாளிகளை அழைத்து செல்ல, வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்வது, சம்மன் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு புலன் விசாரணை இல்லாத செயல்பாட்டிற்கு பாதுகாவலர்களை பயன்படுத்த அதற்கான நடவடிக்கைகளில் ஆராய்ந்து வருகிறது என்றார்.