சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக தொல் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இன்றைய தேதி வரை அவரது அன்றாட நிகழ்வுகள் தொகுதி வேட்பாளர் என்ற முறையிலும் சரி கட்சி தலைவர் என்ற முறையிலும் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்பார்கள்.

ஆனால், தொகுதிக்குள் யாரை கேட்டாலும் தலைவர் நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெளிவாக கிடைப்பதில்லை எனவும் பெரும்பாலான நிர்வாகிகள் தொலைபேசியை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு பத்திரிகையாளர் மத்தியில் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்களிடம் இருந்து தொல். திருமாவளவன் தனித்து விடப்பட்டாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி மேலிட பொறுப்பாளர்கள் சற்று கவனம் செலுத்தி மாநிலத் தலைவர் நிகழ்ச்சி தினமும் ஏதாவது ஒரு பத்திரிகையாளர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட வேண்டும் என சிதம்பரத்தில் இருந்து ஒரு மூத்த பத்திரிகையாளர் குழுக்கு கோரிக்கை அனுப்பி உள்ளார்.