
39வது வார்டு திருமலை நகர் பகுதியில் எக்ஸ்னோரோ தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் ஜெயேந்திர நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் துணையுடன் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் குப்பைகள் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுப்பதாக ஜெயேந்திர நல சங்க குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் நமது மாநகரம் தூய்மை நகரம் நமது பொறுப்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, நீர் நிலைகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் மண்டலக்குழு தலைவர் அவர்களிடம் விளக்கினார்.