
செம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் 101-வது பிறந்த நாளை ஒட்டி செம்பாக்கம் வடக்கு பகுதி தெற்கு பகுதி சார்பாக செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், சிட்லபாக்கம் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.