
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உற்பத்தியாளர் மெகா குழுமத்தில் ஸ்ரீசாய்ராம் கல்லூரி மாணவர்கள் புதுகண்டு பிடிப்புகளை வடிவமைக்க விதமான ஏற்பாடு அதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்சியில் சென்னை திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அரசு மான்யதுடன் பொது தொழிற்சாலை வளர்ச்சி திட்டத்தில் 40 நிறுவனங்கள் பயன் பெரும்விதமாக 47.5 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்ட நிலையில் இதில் சிறு குறு நிறுவனங்களும், மாணவர்களும் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைக்கும் விதமாக அனுமதி அளிக்கிறது. அதன்பேரில் ஸ்ரீசாய்ராம் கல்லூரி மாணவர்கள் இந்த திருமுடிவாக்கம் மிக குழும ஆராய்ச்சி மைய்யத்தில் உள்ள புதிய மென்பொருள்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஒப்பந்தம் இன்று நடைபெற்றது. ஸ்ரீசாய்ராம் கல்விக்குழுமம் முதன்மை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோமுத்து-திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை நிர்வாக இயக்குனர் செல்வம் கையெழுத்திட்டனர்.