தமிழகத்தைச் சோ்ந்த சிறுமி பத்மஸ்ரீ தனது உறவினா்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பாச்சிமேடு பகுதியில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சிறுமி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிறுமிக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து சிறுமியின் உடல் பம்பா அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.