சென்னை பம்மலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியை கொண்டு வெட்ட முயலும் இளைஞரை சக நண்பர்கள் மடக்கி பிடிக்கும் வீடியோ பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்தப் ஆலயத்தில் 57 வது ஆம் ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் 12ஆம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்த இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட மோதல் இரு தரப்பினருக்கு இடையே அடிதடியில் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடிரென கையில் பட்டா கத்தியை எடுத்துக்கொண்டு எதிரியா உள்ள இளைஞரை வெட்ட முயன்று உள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரை தகாத வார்த்தைகளை திட்டி உன்னை வெட்டி விடுவேன் என முயன்ற போது உடன் இருந்த நண்பர்கள் அவரை மடக்கி பிடித்து அவரை அங்கிருந்து கொண்டு சென்றதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

முதல் கட்டு விசாரணையில் கத்தி எடுத்து வந்த இளைஞர் லியோடா என்பதும் ,இவரது தந்தை அதிமுக முன்னாள் கவுன்சிலர் லியோன் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ சமூக வளைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது…