தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்ததில் ஒரே வாரத்தில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் நாய்கடிக்கு ஆளாகி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நி்ர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 20க்கும்‌ மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்தது.

இதில் பலருக்கு முகம், கைகள் மற்றும் கால்களில் வெறிநாய்கள் கடித்து குதறியது.

இதனால் 20 பேரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு காயம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பட்டுள்ளனர்.‌