காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நடுவீரப்பட்டு ஊராட்சியில்
5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசிக்கின்றனர்.

ஊராட்சியில் பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

இது 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி ஆகும்.

இந்த ஏரியின் கரையை நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டியுள்ளார்.
இதனால் ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளி வழியாக
குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 20 அடி அகலத்திற்கு ஏரி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக பொது பணி (PWD) துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் பஜனை கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் செல்வதாலும்,
அப்பகுதியில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களை அருகில் உள்ள பள்ளியில் முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்க ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் ஞானமணி சகாயராஜ் ஏற்பாடு செய்துள்ளனர்.
காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் விசாரணை செய்து வருகின்றனர்.