கீழ்கட்டளை ஏரியில் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன .ஒரு சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி அதில் சுவர் கட்டி இருந்தனர் .
அதனை அரசு அகற்றினாலும் முழுவதுமாக சுவரின் அஸ்திவாரம் உள்பட முழுவதும் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த பகுதியில் சுவர் கட்ட தொடங்கினர்.
இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சிக்கும் போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினார்கள் பொக்லைன் எந்திரம் ஓட்டுனரை அடித்து விரட்டினர். பலமுறை தடைகளை ஏற்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் அனைத்து பாதுகாப்பையும் தர உத்தரவிட்டார்..

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்துள்ளது ஏற்கனவே இந்த பிரச்சனை தொடர்பாக அறப்போர் இயக்கம் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தது இதனை தொடர்ந்து தற்போது நிரந்தரமாக ஆக்கிரமிப்பு அதற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது