
“அந்த மனசுதாங்க கடவுள்”
கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ரசலையன்,
கட்டிட நிறுவன உரிமையாளராக உள்ள இவர் மேஸ்திரியாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர்,
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தனது குடும்பத்தினர், உறவினர்கள் நிறுவனத்தில் பணிபுறிபவர்கள், வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினார்.
தன்னைபோல் தனது வீட்டருகே உள்ளவர்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் கேக், மட்டன் பிரியாணி, புத்தாடைகளை வழங்கினார்.
முன்னதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். மண்டலகுழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், கவுன்சிலர் ஷகிலா ஆனந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..
மேலும் ரசலையன் செய்தியாளகளிடம் பேசும்போது :- தன் குடியிருக்கும் பகுதியில் உள்ளவர்களும் புத்தாடை அணித்து பண்டிகை கொண்டாட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஆண்டுதோரும் வழங்கிவருவதாகவும், தன்னைபோல் தன் மகன்களுக்கும் பிறருடன் பண்டிகை கொண்டாட கூறி செயல்படுவதாக கூறிய ரசலையன் ஆன செலவும் அறிமுக பேட்டியும் தேவையில்லை, நீங்களும் சாப்பிட்டு போங்க பா இன்முகத்துடன் உணவு வழங்க சென்றார்.